Posts by: Pravin

S-V-Sekhar

எஸ்.வி. சேகர்

- - Comments

எஸ். வி. சேகர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மேடைநாடகக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். நாடகத்துறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கிய இவர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து, கிட்டத்தட்ட 5000 முறைக்கும் மேலாக நாடகங்களை மேடையில் அரங்கேற்றி உள்ளார். இவருடைய நாடக வசனங்கள் பெரும்பாலும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டவைகள் ஆகும். ‘அருக்கானி’, ‘பெரியதம்பி’, ‘வால் பையன்’, ‘சிரிப்பு உங்கள் சாய்ஸ்’ போன்ற நாடகங்கள் எஸ். வி. சேகரின்...

Theeran-Chinnamalai

தீரன் சின்னமலை

- - Comments

தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து,...

Actor-Vikram

விக்ரம் (நடிகர்)

- - Comments

‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’,...

Thiruvalluvar

திருவள்ளுவர்

- - Comments

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல...

Vivek-(actor)

விவேக் (நடிகர்)

- - Comments

தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல்...

Sir_M_Visvesvaraya

எம். விஸ்வேஸ்வரய்யா

- - Comments

‘கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விடா முயற்சி, வேளாண்மையில் புதுமை, தானியங்கி மதகைக் கண்டுபிடித்த மாபெரும் வல்லுநர், நாட்டுக்காக உழைத்த நல்லவர், போன்ற சிறப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் வழங்கி கொவ்ரவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்திற்காக வியக்கவைக்கும் கட்டுமானப்...

Prithviraj-Kapoor

பிரித்விராஜ் கபூர்

- - Comments

பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் ஒரு இளவயது காவல்துறை அதிகாரியின் இளமையான, துருதுருப்பான மற்றும் அழகான மகனான பிரித்விராஜ் கபூர், பாலிவுட்டில் தனது வாழ்க்கையை தொடங்குவதன் நோக்கமாக மும்பைக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இந்திய திரைப்பட துறையில் மிக பிரபலமாக நினைவு கூறப்படும் நடிகர்களில் ஒருவராக திகழப்படுகிறார். அவரது கூர்மையான அறிவும், திறமையான அம்சங்களும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே அவரை இந்திய சினிமாவில் அவரது வழியில் செல்ல முற்பட...

Prabhu_Dheva

பிரபுதேவா

- - Comments

பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறைமைக்காக, இவர் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ எனப் புகழப்படுகிறார். ஒரு நடன இயக்குனராக 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார். ‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா’, (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘சம்திங்...

CHITRA

சித்ரா (பாடகி)

- - Comments

‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “சின்னக்குயில்”, “கானக்குயில்” “வானம்பாடி” என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி...

shivaji

சத்ரபதி சிவாஜி

- - Comments

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு...