Posts by: Pravin

Raksha-Bandhan

ரக்ஷாபந்தன்

- - Comments

சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’...

Silk-Smitha

சில்க் ஸ்மிதா

- - Comments

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத்...

TVS

தி. வே. சுந்தரம் ஐயங்கார்

- - Comments

தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மனிதராவார். 1930களில், வாகனங்களில் செல்வதே ஒரு தூரத்துக் கனவாகப் பல இந்தியர்களுக்கு இருந்த போது, முதல் கிராமப்புற பஸ் சேவையை மதுரையில் தொடங்க வேண்டுமென்று அவர் நோக்கம் கொண்டிருந்தார். அவர் வணிகத்தின் மீதும் மட்டுமல்லாமல், மனித சேவையிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரது புதுமையான தொலைநோக்கு சிந்தனைகளும், கடின உழைப்பும், உறுதியும் ‘டி.வி. சுந்தரம்...

VOC

வ. உ. சிதம்பரம் பிள்ளை

- - Comments

வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி...

Mayawati

மாயாவதி

- - Comments

‘மாயாவதி’ என்றழைக்கப்படும் ‘மாயாவதி நைனா குமாரி’, உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் இளம் பெண் முதலமைச்சரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். மூன்று முறை உத்திரப்பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பாற்றிய இவர், 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இவருடைய பெயரும் இடம் பெற்றது. இந்தியாவின் முதல் தலித் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்ற மாயாவதியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்....

Kunnakudi-Vaithiyanaathan

குன்னக்குடி வைத்தியநாதன்

- - Comments

‘வயலின்’ என்றால் முதலில் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான். வயலின் இசையால், தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்த இவர், வயலினுக்கே பெருமை சேர்த்தவர் என்று கூறலாம். கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை போன்ற பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து, தனது விரல் லாவகத்தினால் தனக்கே உரித்தான பாணியில் மக்களை மயக்கி, அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பத்மஸ்ரீ விருது’,...

Gandhi-Jayanti

காந்தி ஜெயந்தி

- - Comments

நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, அனைத்து மதத்தவர்களும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை,...

Teachers-Day

ஆசிரியர் தினம்

- - Comments

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்....

republic-day

குடியரசு தினம்

- - Comments

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப்...

Independence-Day

சுதந்திர தினம்

- - Comments

‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து...