Posts by: Pravin

Mahavira

மகாவீரர்

- - Comments

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும்...

Raja_Ravi_Varma

ராஜா ரவி வர்மா

- - Comments

ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை...

Satya_Sai

சத்திய சாய் பாபா

- - Comments

ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள், ஒரு இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்டவர் ஆவார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஏராளமான இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகம்முழுவதும் செயல்பட்டு வருகின்றது....

Hariprasad_Chaurasia

ஹரிபிரசாத் சௌராசியா

- - Comments

‘பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா” ஒரு புகழ்பெற்ற வட இந்திய பன்சூரி புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இந்துஸ்தானி இசையில் அவர் மேற்கொண்ட சாதனைகளுக்காக இந்திய அரசு அவருக்கு ‘பத்ம பூஷன்’, மற்றும் ‘பத்ம விபூஷன்’ விருதுகளை வழங்கி கௌரவித்தது. இதைத் தவிர, ‘சங்கீத நாடக அகாடமி விருது’, ‘கோனார்க் சம்மான்’, ‘புனே பண்டிட் விருது’ என மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க புல்லாங்குழல் மேதை ஹரிபிரசாத் அவர்களின் வாழ்க்கை...

Madhubala

மதுபாலா

- - Comments

மதுபாலா அவர்கள், ஒரு புகழ்பெற்ற இந்தித் திரைப்பட நடிகை ஆவார். சுமார் எழுபது திரைப்படங்களுக்கும் மேல் நடித்து, இந்திய சினிமாவில் புகழ்பெற்ற முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர். இவருடைய அழகிய தோற்றமும், வசீகரமான நடிப்பும், அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், ரசிகர்களாலும், திரைப்பட ஊடகங்களாலும், மதுபாலாவை திரையில் தோன்றும் “வீனஸ்” என வர்ணிக்கவும் செய்தது. 1990 ஆம் ஆண்டு திரைப்படப் பத்திரிக்கை நடத்திய வாக்கெடுப்பில், எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான இந்தி நடிகையாக...

LK_Advani

எல். கே. அத்வானி

- - Comments

எல். கே. அத்வானி அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத்தலைவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர். பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பாரதிய ஜனதா கட்சியினை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். அதேசமயம், இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான “ஆர்.எஸ்.எஸ்”-இன் தீவர கொள்கையாளர் ஆவார். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றியுள்ள இவர், 1977 முதல் 1979 வரை இந்தியத் தகவல் மற்றும்...

Mukesh_Ambani

முகேஷ் அம்பானி

- - Comments

‘முகேஷ் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘முகேஷ் திருபாய் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில்...

Chandrababu

சந்திரபாபு (நடிகர்)

- - Comments

‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை...

Tipu_Sultan

திப்பு சுல்தான்

- - Comments

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு...

Jayakaanthan

ஜெயகாந்தன்

- - Comments

ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது....