சாம் மானெக்ஷா
ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்கள், இரண்டாம் உலக போரின் போது, இந்திய ராணுவத்தின் 4/12 எல்லை படை அணிவகுப்பின் இளம் காப்டைனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஜப்பானுக்கு எதிரான படையெடுப்பின் போது, படைத் தளபதியாக இருந்து, படைப்பிரிவை வழிவகுத்தார். மியான்மரில் சிட்டங் ஆற்றிற்கருகில் இருந்த சிட்டங் பாலத்தில் நடந்த ஒரு பொங்கி எழும் போரில், அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இளம் படைத் தளபதியாக இருந்து, அந்த போரில், ஒளி இயந்திர துப்பாக்கியின் தோட்டாக்கள் பலவும் கடுமையாக அவரின் வயிற்றில் பல காயங்கள் ஏற்படுத்தினாலும், கடுமையான மனம் கொண்டு எதிரியை நேருக்கு நேராக முறைத்து, திறமையுடன் தனது படைகளை நிர்வகித்து, போரில் வெற்றி கிட்டும் வரை போராடினார். இந்திய படைகள் அந்த இடத்திற்கு வந்த போது, கடுமையாக காயமடைந்த படைத்தளபதியைப் பார்த்த மேஜர் ஜெனரலான டி.டி. கோவன், படைத்தளபதியின் வீரச்செயலைக் கண்டு, ‘ஒரு இறந்த நபருக்கு இராணுவ கிராஸ் கொடுக்கப்பட முடியாது’ என்று கூறி, அவரது சொந்த இராணுவ கிராசை கழற்றி, உயிருக்குப் போராடிய சாம் மானெக்ஷா மீது சுற்றி வளைத்தார். இந்த படைத்தளபதியே ‘சாம் மானெக்ஷா’ என்றும் ‘சாம் பஹாதுர்’ என்றும் அழைக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். நுரையீரல், கல்லீரல், மற்றும் சிறுநீரகத்தில் 9 குண்டுகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கிட்டத்தட்ட இறந்தவிட்டதாக கருதிய இவரே, 94 வயது வரை வாழ்ந்த இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் ஆவார். நாட்டிற்காக சேவை செய்ய வேண்டுமென்ற அவரது எண்ணமே, அவரை தைரியமாக மரணத்தை சந்திக்க வைத்து, எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் நேராக எதிர்த்து நிற்க வைத்தது. அவரது 40 வருட இராணுவ வாழ்க்கையில், அவர் வெவ்வேறு பதவிகளில் இருந்து, நான்கு போர்களைப் பார்த்த அவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளும், பெருமைகளும் அவரது வழியில் நின்றாலும், அவர் நேர்மை, நீதி, நியாயம் போன்றவற்றைக் கொண்டு அனைத்திற்கும் தீர்வு கண்டார். வீரதீர ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்களின் வாழ்க்கை வரலாறு, வீரச்செயல்கள், மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 3, 1914
பிறந்த இடம்: அமிர்தசரஸ், பஞ்சாப்
இறப்பு: ஜூன் 27, 2008
தொழில்: இந்திய இராணுவ வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சாம் மானெக்ஷா அவர்கள், பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரசில் 3 ஏப்ரல், 1914 ஆம் ஆண்டு, ஒரு பாரசிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஹோர்முச்ஜி மானெக்ஷா ஒரு மருத்துவராவார், மேலும் அவர் முதல் உலகப் போரின் போது, அரச பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது தாயார் பெயர், ஹீராபாய். சிறிது காலம் கழித்து, மானெக்ஷாவின் குடும்பத்தார் அமிர்தசரசிலிருந்து குஜராத்திலுள்ள வல்சாத் என்ற சிறிய நகரத்துக்கு குடிபெயர்ந்தனர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
சாம் மானெக்ஷா அவர்கள், தனது பள்ளிப்படிப்பை அமிர்தசரசிலும், கல்லூரிப்படிப்பை நைனிடாலிலுள்ள ஷெர்வுட் கல்லூரியிலும் முடித்தார். இங்கிலாந்து சென்று மருத்துவம் பயில வேண்டுமென்ற அவரது ஆசைக்கு, ‘அவர் இன்னும் சிறியவராக இருக்கிறார், மேலும் அவரால் அங்கு தனியாக சமாளிக்க முடியாது’ என்று கருதி அவரின் தந்தை மறுப்பு தெரிவித்தார். 1932 ஆம் ஆண்டு, எழுச்சிகரமான செயலாக அவர், டேராடூனில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய இராணுவ அகாடமியில் விண்ணப்பித்து, 40 சிப்பாய்கள் கொண்ட முதல் தொகுப்பில் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து, 1934ல், இந்திய இராணுவ அகாடமி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பின், இரண்டாம் லெஃப்டினன்ட்டாக ராயல் ஸ்காட்ஸிலும், பின்னர், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் கீழ் எல்லைப்படை படைப்பிரிவிலும் பணிக்கப்பட்டார். எழுச்சிகரமாக ஆரம்பித்த அவரது இந்த செயல், விரைவில் வீரச்செயல்களாக மாறி நாட்டின் எதிரிகளை வெளி கொண்டுவரும் அளவுக்கு மாறியது.
இராணுவ வாழ்க்கை
1934 ஆம் ஆண்டு, இந்திய இராணுவ அகாடமியிலிருந்து தேர்ச்சிப் பெற்று வெளியே சென்றவுடன், சாம் மானெக்ஷா அவர்கள், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பணிக்கப்பட்டார். இதுவே இந்திய நாட்டிற்காக அவரது தன்னலமற்ற சேவையின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. முதலில் அவர் 2வது பட்டாலியன் ராயல் ஸ்காட்ஸிலும், பின்னர் 4/12 எல்லைப்படை படைப்பிரிவிலும் இணைக்கப்பட்டார். இவர் படைப்பிரிவின் படைத்தளபதியாக இருந்த போது தான், மியான்மரில் ஜப்பானியர்களை எதிர்த்து சண்டையிட்டு வெற்றி பெற்ற மிகவும் பிரபலமான போரானது நிகழ்ந்தது. இந்த போர் தான், மானெக்ஷா அவர்களுக்கு, ‘இராணுவ கிராஸ்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ‘இராணுவ கிராஸ்’ என்பது “எதிரிகளை எதிர்த்து எந்தவொரு போரிலோ அல்லது நடவடிக்கைகளிலோ வீரமாக செயல்படும் ஆயுத படையில் எந்தவொரு பதவியிலும் இருக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும்’ பாராட்டுரிமை ஆகும். இந்திய-பாகிஸ்தான் பகிர்வுக்குப் பின், 4/12 எல்லைப்படை படைப்பிரிவு பாகிஸ்தானுக்கு சொந்தமானதால், மானெக்ஷா அவர்கள், 8 கூர்க்கா ரைஃபிள் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
நாட்டின் பகிர்வுக்குப் பின்னர், பல்வேறு தடங்கல்கள் இருந்து கொண்டே இருந்தது. அப்போது மானெக்ஷா அவர்கள், திட்டமிடல் மற்றும் நிர்வாக சிக்கல்களை தனது நுண்ணறிவாலும், மனப்போக்காலும் கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது. சிறிது காலத்திற்குப் பின், பாகிஸ்தான் காஷ்மீரைப் படையெடுத்த போது, அவர் கர்னலாக பொறுப்பேற்றார். 1947-48 செயல்பாட்டின் போது, அனைத்து இராணுவ நடவடிக்கைகளிலும் ,அவர் தனது அசாதாரணமான வியூகம் மற்றும் போர் திறன்களை செயல்படுத்தியதே வெற்றிக்கு பெரிதும் காரணமாக அமைந்தது. பின்னர் 1962 ஆம் ஆண்டு, NEFAவில் (இப்போதைய அருணாச்சல பிரதேசம்) இந்தியா சீனாவின் கைகளில் தோல்வியை சந்தித்த போது, பிரதமர் ஜவஹர் லால் நேரு பின்னடைவு கண்ட இந்திய படைகளைத் தலைமைத் தாங்குமாறு மானெக்ஷா அவர்களைக் கேட்டுக்கொண்டார். அனைத்து சிப்பாய்களும் கூட, தங்கள் தளபதி மீது உன்னத நம்பிக்கை வைத்திருந்தனர், மேலும் சீனாவின் அடுத்த ஊடுருவலின் போது, இந்தியா வெற்றி அடைந்தது. 1965ல் இந்திய-பாகிஸ்தான் போரின் போது, மானெக்ஷா அவர்கள், கிழக்குக் கட்டளை படைத் தளபதியாக நிறுவப்பட்டார், மேலும் அவரது தலைமை வெற்றிகரமாக வெற்றிவாகை சூடியது. பின்னர், ஜூன் 7, 1969 அன்று, ஜெனரல் குமாரமங்கலம் அவர்களை பின்தள்ளி, எட்டாவது ராணுவ பணியாளர்களின் தலைவரானார், மானெக்ஷா.
1971 ஆம் ஆண்டு, நடந்த இரண்டாவது இந்திய-பாகிஸ்தான் யுத்தம், அவரது போர் உத்திகளையும், திறமைகளையும் மீண்டும் கண்டது. ராணுவ நடவடிக்கை எப்போது எடுக்க வேண்டும் என்பதில், பிரதமர் இந்திரா காந்திக்கும், மானெக்ஷா அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும், மானெக்ஷா அவர்களின் விருப்பப்படி நடக்காவிட்டால், அவர் ராஜினாமா செய்வார் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்திரா காந்தி அவரது திட்டங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாக, குறுகிய காலகட்டமான 14 நாட்களிலேயே பாகிஸ்தானின் 93, 000 வீரர்கள் சரணடைந்தனர் என்பது தெளிவாக தெரிந்தது. இந்தியா போரில் வெற்றி பெற்று, இந்திய இராணுவ வரலாற்றில் மிக விரைவான இராணுவ வெற்றிகளில் ஒன்று என்ற முத்திரையையும் பதித்தது. இந்திய இராணுவத்திற்கும், நாட்டிற்கும் நான்கு தசாப்தங்களாக தனது தன்னலமற்ற சேவை புரிந்த பின்னர், சாம் மானெக்ஷா அவர்கள், முதன் முதல் ஃபீல்டு மார்ஷலாக மாற்றப்படும் முன்பு, ஜூன் 15, 1973 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
உயர் கட்டளைகளும், மரியாதைகளும்
1942ல், ஜப்பானியர்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த போரில், கடுமையாக காயமுற்று, இராணுவ கிராஸ் சம்பாதித்த அவரால் இந்த தாக்குதலிலிருந்து மீண்டும் தேறி வர சிறிது காலம் தேவைப்பட்டது. தனது 12 எல்லை படை ரைஃபிளில் சேர்வதற்கு முன், சாம் மானெக்ஷா அவர்கள், குவெட்டாவில் உள்ள பணியாளர்கள் கல்லூரியில் ஒரு பயிற்சி மேற்கொண்டு, அங்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் இறுதியில், இந்திய-சீனாவில் ஜெனரல் டைசியின் ஸ்டாஃப் ஆபீசராக சேர்ந்து, 10000 போர் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவினார். இதன் பின், 1946ல், ஆஸ்திரேலியாவுக்கு ஆறு மாதங்கள் நீண்ட விரிவுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1947-48 ஜம்மு & காஷ்மீர் நடவடிக்கைகளின் போது, அவர் காலாட்படைப் பள்ளியின் தளபதியாக தேர்வு செய்யப்பட்டு, மேலும் 8 கூர்க்கா ரைஃபிள் (அவரது புதிய ராணுவ படை அணிவகுப்பில்) மற்றும் 61 குதிரைப்படையின் கர்னலாகவும் பொறுப்பேற்றார். நாகாலாந்தில் கிளர்ச்சி நிலைமையை வெற்றிகரமாக கையாண்டதற்காக, 1968ல் அவருக்கு ‘பத்ம பூஷண் விருது’ வழங்கப்பட்டது. 1971ன் இந்திய-பாகிஸ்தான் போரின் வெற்றிக்கு, அவரது மாசற்ற மூலோபாய திறன்களும், பங்களிப்புமே காரணமாக இருந்ததால், 1972 ஆம் ஆண்டில், அவர் ‘பத்ம விபூஷன் விருதை’ பெற்றார். இறுதியாக, ஜனவரி 1, 1973 ஆம் ஆண்டு, மானெக்ஷா அவர்களுக்கு மதிப்புமிக்க பட்டமான ‘ஃபீல்ட் மார்ஷல்’ ரேங்க் வழங்கப்பட்டது. சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவர் வாரிய இயக்குனராகவும், பல்வேறு நிறுவனங்களின் தலைவராகவும் வெற்றிகரமாக பணியாற்றினார்.
இறப்பு
ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்கள், அவரது வாழ்வின் கடைசி காலத்தை, தனது மனைவியுடன் தமிழ்நாட்டிலிருக்கும் குன்னூரில் குடிபெயர்ந்து வாழ்ந்தார். அவரது 94வது வயதில், நிமோனியாவால் ஏற்பட்ட சிக்கல்களினால் தமிழ்நாட்டிலிருக்கும் வெலிங்டனிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் தனது இரண்டு மகள்களான ஷெர்ரி, மாயா, மற்றும் மூன்று பேரக்குழந்தைகளுடன் தனது இறுதி வாழ்வை செலவிட்டார்.
காலவரிசை
1914: சாம் மானெக்ஷா அவர்கள் பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரசில் 3 ஏப்ரல், 1914 ஆம் ஆண்டு பிறந்தார்.
1932: இந்திய இராணுவ அகாடமியின் (IMA) முதல் தொகுதி தேர்வில் தேர்வான 40 சிப்பாய்களில் ஒருவர்.
1934: இந்திய இராணுவ அகாடமி தேர்வில் தேர்ச்சிப் பெற்று, பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பொறுப்பேற்றார்.
1935: லெஃப்டினன்ட்டாக மாறினார்.
1939: சில்லூ போடு என்பவரைத் திருமணம் செய்தார்.
1940: கேப்டனாக மாறினார்.
1942: தனது துணிகர செயலால் ‘இராணுவ கிராஸ்’ பெற்றார்.
1943: மேஜராக மாறினார்.
1945: லெஃப்டினன்ட் கர்னலாக பொறுப்பேற்றார்.
1946: கர்னலாக மாறினார்.
1947: பிரிகேடியராக மாறினார். மேலும் பாகிஸ்தான் காஷ்மீரை படையெடுத்த போது, செயல்பாடுகளின் கர்னலாக இருந்தார்.
1950: இந்திய இராணுவத்தின் பிரிகேடியராக மாறினார்.
1957: மேஜர் ஜெனரலாக மாறினார்.
1963: லெஃப்டினன்ட் ஜெனரலாக மாறினார்.
1965: இந்திய பாகிஸ்தான் போரின் போது, கிழக்கு கட்டளை தளபதியாக பணியில் இருந்தார்.
1968: பத்ம பூஷன் விருது பெற்றார்.
1969: ஜெனரலாக மாறினார்.
1971: இரண்டாவது இந்திய பாகிஸ்தான் போரின் போது, அவரால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. .
1972: பத்ம விபூஷன் விருது பெற்றார்.
1973: ஃபீல்ட் மார்ஷலாக மாறினார்.
2008: தனது 94வது வயதில் மரணம் நிமோனியாவால் இறந்தார்.