டி. சதாசிவம்
‘டி.சதாசிவம்’ என்றும் ‘தியாகராஜ சதாசிவம்’ என்றும் ‘கல்கி தியாகராஜ சதாசிவம்’ என்றும் பிரபலமாக அறியப்படும் அவர் தீபகற்ப இந்தியாவிலிருந்து வந்த மிகப் பெரிய சுதந்திர போராட்ட வீரர்களுள் ஒருவராவார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பல கலகங்களில் அவருடைய பங்களிப்பு இருந்தாலும், தியாகராஜ சதாசிவம் அவர்கள் ஒரு திறமையான பாடகர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜ சதாசிவம் அவர்களை ஒரு சுதந்திர போராட்ட வீரராக பலருக்குத் தெரிந்திருந்தாலும், திரையுலகில் தயாரிப்பாளராக இவருடைய பங்களிப்பு மிகவும் பேசப்பட்டது. மிகப்பெரும் சாதனைகளில் ஒன்றான புகழ்பெற்ற தமிழிதழான ‘கல்கியை’, கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து துவங்கியது, டி.சதாசிவம் அவர்களின் வாழ்க்கையை பெரிதும் அலங்கரித்தது. இத்தகைய புகழ் தரும் பறைசாற்றல்கள் இருந்தாலும், டி.சதாசிவம் அவர்கள் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் பாரம்பரிய கர்நாடக பாடகர்களுள் ஒருவரான எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் கணவர் என்று நன்கு அறியப்பட்டார்.
பிறப்பு: செப்டம்பர் 4, 1902
பிறந்த இடம்: ஆங்கரை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு: நவம்பர் 22, 1997
தொழில்: எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், டி.சதாசிவம் அவர்கள் ஒரு எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். டி.சதாசிவம் அவர்கள், தனது வாழ்க்கைப் பயணத்தை சென்னை மாகாணத்தின் கீழ் வரும் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆங்கரையில் தொடங்கினார். அவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில், செப்டம்பர் 4, 1902ல் பிறந்தார். ஆகவே, தனது இளம் வயதிலேயே, மரபுசார்ந்த விஷயங்களை அறிந்துக் கொண்டார்.
ஆரம்ப வாழ்க்கை
ஒரு சிறுவனாக இருக்கும் காலத்திலேயே டி.சதாசிவம் அவர்கள், சுதந்திர போராட்டத்தில் சேர வேண்டுமென்பதற்காக தனது பள்ளியை விட்டுவிட்டார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும். தொடக்கத்தில், விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகரமான செயல்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், சிறுது காலத்திற்குப் பின், அவர் காந்தியடிகளின் அஹிம்சைத் தத்துவங்களைப் பின்பற்றினார். ஆங்கிலேயரைக் கொன்ற சுதந்திர போராட்ட வீரரான, சுப்ரமணிய சிவாவின் தீவிர பக்தரான டி.சதாசிவம் அவர்கள், ‘பாரத் சமாஜில்’ சேர்ந்தார். டி. சதாசிவத்தின் தைரியத்தைக் கண்டு வியந்த சுப்ரமணிய சிவா அவர்கள், அவரைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார். பின்னர், சுதேசி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழுநோயால் அவதியுற்ற சுப்ரமணிய சிவாவிற்கு சேவை செய்தார்.
தொழில்
1920ல், சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான ‘சட்டமறுப்பு இயக்கத்தின்’ தன்னை ஒரு அங்கமாக கருதி செயல்பட தொடங்கினார். அவர் வகித்த இந்தப் பங்கே அவரது இசைத் திறமையை வெளிக்கொண்டு வர உதவியது. டி.சதாசிவம் அவர்கள் கிராமம், கிராமமாக சென்று தன் இசைத் திறமையின் மூலம் தேச பக்திப் பாடல்களைப் பாடினார். இது மக்களை மிகவும் கவர்ந்தது. அவரது திறமையும், சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்புணர்வும், மக்களை உற்சாகத்துடன் ஊக்கப்படுத்தியது மட்டுமல்லமால் சுதந்திர உணர்வையும் விதைத்தது.
இல்லற வாழ்க்கை
எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை, ஜூலை மாதம் 1936ல் டி.சதாசிவம் அவர்கள் சந்தித்தார். இதுவே, அவர் வாழ்வின் மிக அற்புதமான நிகழ்வாகும். இருவரும் ஈடிணையாயிருந்தனர். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற பாடகியாக இருந்ததால், டி.சதாசிவம் அவர்களின் சித்தாந்த மற்றும் அரசியல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும், ஆதரவு தரவும் முடிந்தது. அதேசமயம், சதாசிவம் அவர்களும், சுப்புலட்சுமி அவர்களின் இசை வாழ்க்கைக்கு ஆதரவுத் தந்து பெரும் வழிகாட்டியாக இருந்தார். இருப்பினும், அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், டி.சதாசிவம் அவர்கள் ஏற்கனவே அபிதகுசாம்பாள் என்பவரை மணமுடித்திருந்தார். அவர்களுக்கு ராதா, விஜயா என்ற மகள்களும் இருந்தனர். இதற்கிடையில், அவரது மனைவி ஜூலை 10, 1940ல் இறந்ததால், எம்.எஸ்.சுப்புலட்சுமியை மணமுடித்தார்.
கல்கி நாளிதழ்
1941ல், டி.சதாசிவம் அவர்கள், தன் வாழ்வில் பெரும் திருப்பத்தை சந்தித்தார். இந்த ஆண்டில், அவருடைய நண்பரான ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து “கல்கி” என்ற தேசிய வாராந்திர பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிக்கை, பல பிரதிகள் விற்று மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 1954ல், பத்திரிகையாசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பின், டி.சதாசிவம் அவர்கள், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ‘கல்கி’ நாளிதழின் தரத்தையும், குணத்தையும் கருத்தில் கொண்ட டி.சதாசிவம் அவர்கள், எந்த ஒரு சமரசமுமில்லாமல் மிக சிறப்பான உள்ளடக்கத்தையே வெளியிட விரும்பினார்.
சதாசிவம் ஆற்றிய தொண்டுகள்
டி. சதாசிவம் அவர்கள், ஒரு சிறந்த நண்பராக இருந்தார். இளம் வயதிலிருந்த நட்பு வட்டத்தை, அவர் தன் வாழ்வின் இறுதிவரை கடைப்பிடித்தார். ஏழை, எளியோருக்கு அவர் செய்த அபரிமிதமான தொண்டும், அவர்களுக்கு செய்து கொடுத்த வசதியும் பெரிதும் பேசப்பட்டது. மேலும், வேலையற்றோருக்கு பல உதவிகளும் செய்தார். டி. சதாசிவம் அவர்கள் தனது மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் சேர்ந்து அறக்கட்டளைக்காக கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் வரை வழங்கினார். டி. சதாசிவம் அவர்களை ‘மனிதருள் மாணிக்கம்’ என்று அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களாலேயே சொல்ல முடியும்.
டி.சதாசிவம் அவர்களின் ஆன்மீகத் தலைவரான, காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியராக இருந்த மறைந்த ‘சந்திரசேகராந்திர சரஸ்வதி’ அவர்களின் நினைவாக ஒரு ‘மணி மண்டபம்’ கட்ட நிதித் திரட்ட முயன்றார். இதனையே, தனது வாழ்வின் இறுதி நோக்கமாக கொண்டிருந்தார். தனது நண்பர்களின் உதவியுடன், காஞ்சிபுரத்திற்கருகே மணி மண்டபத்தைக் கட்டி முடித்தார். இதுவே, நண்பர்களின் மீது எவ்வளவு பற்றுடையவராக இருந்தாரோ, அதே அளவு தனது குருவிடத்திலும் பற்றுடையவராக இருந்தார் என்பதற்கு சான்று. தனது குருவை, ‘பூமியின் கடவுள்’ என்று நினைத்து வழிபாடு செய்தார்.
இறப்பு
‘கல்கி’ தியாகராஜ சதாசிவம் அவர்கள், தமிழ்நாட்டின் தென்னகரமான சென்னை மாநகரில், நவம்பர் 22, 1997ல் தனது 95வது வயதில் காலமானார்.
பரம்பரைச்சொத்து
டி.சதாசிவம் அவர்கள் இன்று இல்லையென்றாலும், அவரது புராணம் இன்றும் வாழ்கின்றது. சி.ராஜகோபாலாச்சாரியின் மரணத்திற்குப் பின், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நின்ற சுதந்திர போராளிகளுள் ஒருவராவார். எனினும், நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அவர் கொண்ட ஈடுபாட்டிலும், பற்றிலும், அவர் தனது இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தார்.
காலவரிசை
1902: சென்னை மாகாணம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருக்கும் ஆங்கரையில் பிறந்தார்.
1920: சட்டமறுப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
1936: எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை சந்தித்தார்.
1940: அவரது முதல் மனைவியின் மறைவுக்குப் பின் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை மணமுடித்தார்.
1941: தனது நண்பரான ஆர்.கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, தேசிய வாராந்திர நாளிதழான ‘கல்கியை’ தொடங்கினார்.
1997: சென்னையில் காலமானார்.